News June 22, 2024
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியப்படும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை எனக் கூறிய அவர், விலை மலிவான சாராயத்தை குடிக்க நினைப்பவர்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றார்.
Similar News
News November 16, 2025
TN SIR: 26,000 குடும்பங்களுக்கு பெரிய சிக்கல்

தமிழகத்தில் SIR காரணமாக சென்னை, பெரும்பாக்கம் காலனியில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்கள், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு முறையான முகவரியும், அதற்கான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர்களின் வாக்குரிமை உறுதி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
News November 16, 2025
போதைப்பொருள் விவகாரத்தில் அடிபடும் ‘காஞ்சனா 4’ நாயகி

மும்பை போலீஸ் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடித்தது. அதில் ‘காஞ்சனா 4’ நாயகி நோரா பதேகி பெயர் அடிப்பட்டது. ஆனால், இதில் தனக்கு சம்மந்தம் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் பார்ட்டிக்கு போவதில்லை, வேலை செய்யவே நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நியூஸ்களின் வியூவ்ஸ்களுக்காக தனது பெயரை பயன்படுத்தினால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
News November 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 521 ▶குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ▶பொருள்: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.


