News September 14, 2024
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம் ₹32 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ₹32 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அணு ஆயுதங்களின் திறன் குறித்து, 1939ஆம் ஆண்டு USA அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெட்டிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதம் அமெரிக்க அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில், மனித உயிர்கள் பறிபோக அணு ஆயுதம் காரணமாக இருந்ததை அறிந்து அவர் வேதனை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 27, 2025
SIR-க்கு எதிராக திமுக கூட்டணி தீர்மானம்

CM ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில்<<18119925>> SIR-க்கு <<>>எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்ததை போல SIR என்ற பெயரில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் சதியை அனுமதிக்க மாட்டோம் என்றும் திமுக கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும், 2026 தேர்தலை சீர்குலைக்கும் வேலையை EC தொடங்கியுள்ளதாகவும் திமுக கூட்டணி சாடியுள்ளது.
News October 27, 2025
புயல் அலர்ட்: 21 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், கவனம் மக்களே..!
News October 27, 2025
வெளியூரில் இருப்பவர்கள் SIR-ன் போது என்ன செய்ய வேண்டும்?

பூத் அதிகாரிகள், ஒவ்வொரு வீட்டிற்கு 3 முறை சென்று வாக்காளர்களின் தகவல்களை சரிபார்பார்கள் என <<18119925>>ECI<<>> தெரிவித்துள்ளது. வெளியூரில் இருப்பவர்கள் ஆன்லைனில் Enumeration Form-ஐயும், 2003 வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு பார்க்கலாம். மேலும், பிறந்த தேதி (அ) இருப்பிடச் சான்றாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும், SIR-க்கான அடையாள சான்றாக ஆதாரை அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது.


