News February 28, 2025
CM ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன அழகிரி

முதல்வர் ஸ்டாலினுக்கு, அவரது அண்ணன் மு.க.அழகிரி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ளார். இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பேரனுடன் வந்த மு.க.அழகிரி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 2014ல் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சகோதரர்கள் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
Similar News
News March 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 193
▶குறள்:
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
▶பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
News March 1, 2025
தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு: ஜோதிமணி

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், வக்கிரத்துடன் பேசுவது அல்ல என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பொருட்டாக மதிக்காத சீமான் போன்றவர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – முகமதின் ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா – முகமதின் இடையேயான ஆட்டம் ‘டிரா’ ஆனது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா – முகமதின் அணிகள் மோதின. இதில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிரா ஆனது.