News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் விலையில் மாற்றமில்லை!

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 5, 2025
FLASH: முதலிடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தா!

லண்டனில் நடக்கும் கிளாசிக் செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. மொத்தம் 119 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்பட பிரனவ் ஆனந்த், இனியன் விளையாடினர். இந்நிலையில், 9 சுற்றுகள் முடிவில் செர்பியாவின் வெலிமிக் ஐவிக், இங்கிலாந்தின் அமீத் காசி, பிரக்ஞானந்தா தலா 7 புள்ளிகளை கொண்டிருந்ததால் மூவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர்.
News December 5, 2025
டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்பை கொண்ட நாடுகள்

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது. நேர விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இதனை தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


