News May 7, 2025
அட்சய திருதியை: உச்சத்தில் தங்கம் விற்பனை..!

விலை எவ்வளவு ஏறினால் என்ன? அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கியே தீருவேன் என மக்கள் நினைக்கின்றனர். இதனால், TN முழுவதும் நகைக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. இதனால், கடந்த ஆண்டு அட்சய திருதியைவிட இந்த ஆண்டு 20% கூடுதலாக விற்பனை நடைபெற்றுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு பவுன் ₹53,280-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ₹71,840-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 5, 2025
விஜய் முதல்வர் வேட்பாளரா? ஜெயக்குமார் பதில்

தவெகவின் CM வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்திருப்பது அவர்கள் உரிமை ஆனால், முதல்வரை முடிவு செய்வது மக்கள் என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு பேசிய அவர், தேர்தல் அலுவலர்களை மிரட்டி திமுகவினர் படிவங்களை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். SIR மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிக்கப்படும் என சிலர் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.
News November 5, 2025
இந்த 8 மூலிகைகள் போதும்.. வயிறு பிரச்னையே வராது!

உணவே மருந்து என்ற புரிதலுடன் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால், பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றாததே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில், வயிறு, குடல் சார்ந்த பாதிப்புகளை குணப்படுத்தும் 8 சிறந்த மூலிகைகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT
News November 5, 2025
அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

AUS-க்கு எதிரான டி20 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கைவிட, ஹர்ஷித் ராணாவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த IND அணியின் பவுலிங் கோச் மோர்கல், அர்ஷ்தீப் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், 2026 டி20 WC-க்கு தயாராகும் வகையில், அணியில் சில சோதனை முயற்சிகளை செய்ய வேண்டியிருந்தது, அதை அவரும் புரிந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.


