News August 4, 2024
தன் மீதான விமர்சனங்களுக்கு அக்சய் குமார் பதில்

தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் அக்சய் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார். நான்கு, ஐந்து படங்கள் சரியாக போகவில்லை என்ற காரணத்தால், கவலைப்பட வேண்டாம் நண்பரே என, தனக்கு மெசேஜ்கள் வருவதாக தெரிவித்த அவர், தான் இன்னும் இறக்கவில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். அக்சய் குமார் நடித்துள்ள ‘கேல் கேல் மெய்ன்’ படம் வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
Similar News
News December 19, 2025
BREAKING: கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்

கோவை மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1) இறந்தவர்கள்-1,19,489.
2) முகவரியில் இல்லாதவர்கள்- 1,08,360
3) குடிபெயர்ந்தோர்- 3,99,159
4) இரட்டை பதிவுகள்- 23,202 என
மொத்தம்- 6,50,590 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
News December 19, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் உத்தேச தேதியை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புக்கு 2026 பிப்.23 முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 12-ம் வகுப்புக்கு பிப்.9 முதல் பிப்.14-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
News December 19, 2025
பார்லிமென்டில் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அதில் 8 முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. *மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்ட ‘விக்சித் பாரத் G RAM G’ மசோதா *காப்பீட்டு துறையில் FDI முதலீட்டை 100% ஆக உயர்த்துவதற்கான ‘சப்கா பீமா சப்கி ரக்ஷா’ மசோதா, *பான் மசாலா, புகையிலை மீது சிறப்பு வரி விதிக்கும் செஸ் மசோதா, *அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ‘ஷாந்தி’, ஆகியவை நிறைவேறின.


