News December 12, 2024
ஷூட்டிங்கில் காயமடைந்த அக்ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் HOUSEFULL 5 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News August 28, 2025
லோன் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

தெருவோர கடைக்காரர்களுக்கான PM Svanidhi கடன் திட்டத்தில் வழங்கப்படும் தவணைக் கடன் ₹5,000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் தவணை கடன் வரம்பு ₹15,000-ஆகவும், 2-ம் தவணை ₹25,000-ஆகவும், 3-ம் தவணை ₹50,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் தவணையை செலுத்தினால் சில சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
News August 28, 2025
கச்சத்தீவை விட்டுத்தர முடியாது: இலங்கை உறுதி

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும் என விஜய் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும், தேர்தல் காலம் என்பதால் அரசியலுக்காக ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவித்து வருவதாகவும் இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
News August 28, 2025
மனதை வருடும் மாளவிகா மோகனன்

விஜய்யின் ‘மாஸ்டர்’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இப்போது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. மாடர்ன், ஹோம்லி என இரண்டிலும் கலக்கும் அவர், சேலையணிந்து எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த போட்டோஸை மேலே கண்டு மகிழுங்கள்.