News June 9, 2024
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்

மக்களவைத் தேர்தலில் வென்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகிலேஷ் தற்போது கர்ஹால் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். 14 நாள்களில் அவர் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டி உள்ளதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
Similar News
News November 10, 2025
ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தா, ஸ்ரீநகர், காசியாபாத், லக்னோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கார் வெடி விபத்து குறித்து முழு விவரத்தை டெல்லி காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார்.
News November 10, 2025
மீண்டும் வருகிறார் 90s கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான்

இன்றைய இளம் தலைமுறைகள் கொண்டாடுவதற்கு பல சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால் 90s கிட்ஸின் ஒரே சூப்பர் ஹீரோ சக்திமான் மட்டுமே. அப்படிப்பட்ட சக்திமான் கதைகள் இப்போது ஆடியோ வடிவில், 40 எபிசோட் சீரிஸாக வந்துள்ளன. இந்த கதைகள் 2K கிட்ஸுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ஆடியோ சீரிஸை வடிவமைத்து வெளியிட்ட பாக்கெட் FM நம்பிக்கை தெரிவித்துள்ளது. சக்திமானின் தீவிர ரசிகர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க..
News November 10, 2025
தங்க நகை கடன்… மக்களுக்கு அதிர்ச்சி

தங்க நகை கடன் வழங்குவதில் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன் பெறுபவர்கள் அந்த நகை தனக்கு சொந்தமானது என நிரூபிக்க ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த அறிவிப்பை RBI வெளியிட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், அது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


