News May 21, 2024
மாயாவதிக்கு அழைப்பு விடுத்த அகிலேஷ்

அரசியலமைப்புச் சட்டத்தை காக்க INDIA கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இணைய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கன்னௌஜில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக தொழிலதிபர்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறுபான்மையினரிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டி வந்துள்ளது. 140 இடங்களில்கூட வெல்ல முடியாத நிலைக்கு பாஜகவை மக்கள் தள்ளுவார்கள்” என்றார்.
Similar News
News February 19, 2026
இந்திய ஸ்நாக்ஸை துரத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் ₹5 அல்லது ₹10 பாக்கெட்டுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதன் சந்தையின் மதிப்பு 2027-ம் ஆண்டுக்குள் ₹1,21,700 கோடியை எட்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. சிப்ஸ், வேஃபர்கள் மட்டுமல்லாமல் முறுக்கு, மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் சந்தையில் 43% -ஐ பிடித்துள்ளன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ஸ்நாக்ஸ் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
News February 19, 2026
வங்கிக் கணக்கில் ₹2000+₹2000.. ஹேப்பி நியூஸ்

கோடைகால சிறப்பு நிதியாக இனி ஆண்டுதோறும் மகளிருக்கு <<19184435>>₹2,000 <<>>வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 மாத மகளிர் உரிமை தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து, மகளிரின் வங்கி கணக்கில் ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மே மாதத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்படவுள்ள மகளிர் உரிமை தொகை ₹2,000, கோடைகால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹4,000 வழங்கப்படும்.
News February 19, 2026
விமானத்தில் பிரச்னை செய்தால்.. 30 நாள் பறக்க தடை

விமானங்களில் சக பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் பயணிகள் மீது விமான நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க DGCA அனுமதி அளித்துள்ளது. புதிய விதிகளின்படி, விமானத்தில் புகைபிடித்தல் அல்லது மது அருந்திவிட்டு சண்டையிட்டால் 30 நாள்கள் வரை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும். அதேபோல், விமானியின் அறைக்குள் நுழைய முயற்சித்தால், 2 ஆண்டுகளுக்கு மேல் தடை விதிக்கப்படும்.


