News July 4, 2025
300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.
Similar News
News September 7, 2025
தங்கம் விலை மேலும் உயர்கிறது

தங்கம் விலை அடுத்த 12 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை எனவும், மேலும் உயரும் என்றும் தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். <<17627852>>தங்கம் விலை<<>> நேற்று வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் 1 சவரன் ₹80,040-ஐ எட்டியது. ரிஸ்க் இல்லாத முதலீடு தங்கம் என்பதால், இதில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இனி தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டும் என்றும் கணித்துள்ளார்.
News September 7, 2025
விசிகவுக்கு அதிக சீட்? திமுக பக்கா ப்ளான்

‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை வலுத்துவரும் நிலையில், 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுக உள்ளதாம். இதனால் கடந்த முறையை விட இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு சீட் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, காங்., – 20, கம்யூ., கட்சிகள் – 8, IUML – 1 என கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கடந்த முறையை விட (6) இந்த முறை விசிகவுக்கு 8 சீட்டுகள் வழங்க திமுக தயாராகி வருகிறது.
News September 7, 2025
ஞானத்தை அள்ளித் தரும் விநாயகர் காயத்ரி மந்திரம்!

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயா
பொருள்
வளைந்த யானைத் தும்பிக்கையைக் கொண்டவரே நான் பணிவுடன் உயர்ந்த புத்தியை நாடுகிறேன். என் வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்ய மகிமை மிக்கவரை வணங்குகிறேன். எங்கும் நிறைந்த, ஒற்றைத் தந்தத்தையுடைய தெய்வீகப் பெருமானை நான் வணங்குகிறேன். SHARE IT.