News August 16, 2025
AK 64 அப்படியான படம் அல்ல: ஆதிக்

‘குட் பேட் அக்லி’ முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கூலி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால், முன்னணி ஹீரோக்களின் படங்களை அனைவரும் ரசிக்கும்படியாக எடுங்கள் என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். இந்நிலையில், ‘AK 64’ படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அதன் இயக்குநர் ஆதிக் கூறியுள்ளார். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
Similar News
News April 8, 2026
அமைச்சர்கள் மனைவிகளில் யாருக்கு அதிக சொத்து?

தேர்தலில் போட்டியிடும் திமுக அமைச்சர்கள், வேட்புமனுவுடன் தங்கள் மனைவியரின் சொத்து விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், துரைமுருகன் மனைவி சாந்தகுமாரிக்கு ₹61 Cr, TRB ராஜா மனைவி ஷர்மிளாவுக்கு ₹59.82 Cr, காந்தி மனைவி கமலாவுக்கு ₹20.73 Cr , தங்கம் தென்னரசு மனைவி மணிமேகலைக்கு ₹17.26 Cr, உதயநிதி மனைவி கிருத்திகாவுக்கு ₹13.25 Cr இருப்பது தெரியவந்துள்ளது.
News April 8, 2026
லோன் வாங்கியவர்களுக்கு RBI மகிழ்ச்சி அறிவிப்பு

குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக தொடரும் என்ற அறிவிப்பால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியில் மாற்றம் ஏதும் இருக்காது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நிதியாண்டில் RBI வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக பேசப்பட்ட நிலையில், வட்டி விகிதம் மாறாதது கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
News April 8, 2026
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஆதரவு

ஈரான் உடனான போரை 2 வாரங்கள் நிறுத்தும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட நிலையில், இஸ்ரேல் கருத்து எதுவும் கூறாமல் இருந்தது. இதனால், அமெரிக்கா போரை நிறுத்தினாலும், ஈரானை இஸ்ரேல் தாக்கக்கூடும் என சந்தேகம் நிலவியது. இந்நிலையில் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார்.


