News January 11, 2025
ஒரே நேரத்தில் அஜித்தின் சர்ப்ரைஸூம், அதிர்ச்சியும்

துபாயில் நடிகர் அஜித் பேசும்போது, ஜனவரியில் ஒருபடமும் (விடாமுயற்சி), ஏப்ரலில் ஒரு படமும் (குட் பேட் அக்லி) வெளியாகும் என்று சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனால், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் #AjithKumarRacing, #VidaaMuyarachi ஆகிய ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை. தற்போது கார் ரேஸில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
Similar News
News August 5, 2025
அனுபவம் சொல்லித்தரும் பாடம்

*உங்களால் எல்லாரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது *உங்கள் சுயமதிப்பானது உங்களை சார்ந்ததே. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல *சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்கள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனையால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேரிட்டிருக்கலாம்…. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?
News August 5, 2025
இந்தியா மீது வரியை உயர்த்துவேன்: டிரம்ப்

இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இந்நிலையில் வரி மேலும் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் உக்ரைன் போர் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை என்றும், இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அதன் மீதான வரியை உயர்த்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
லெஜண்ட் இயக்குநருடன் சேரும் வாரிசு நடிகர்!

தக்லைஃப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. காதல் திரைப்படங்களின் டிரெண்ட் செட்டரான மணிரத்னம் பட்டறையில் இப்போது இணைந்திருப்பது துருவ் விக்ரம் என்கிறார்கள். அவருக்கு ஜோடியாக லேட்டஸ்ட் சென்சேசன் ருக்மினி வசந்த் நடிப்பதாகவும் தகவல். வரும் செப்டம்பரில் ஷூட்டிங் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காம்போ எப்படி இருக்கும்?