News April 20, 2025
விஜய்க்கு போட்டியாக அஜித் படம் ரீ-ரிலீஸ்

பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
Similar News
News December 17, 2025
உலகை விட்டு மறைந்தனர்.. கண்ணீர் அஞ்சலி

2025-ல் ஏராளமான சினிமா பிரபலங்கள் உயிரிழந்த நிலையில், திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியது. காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கிய இவர்களை, தமிழ் சினிமா என்றும் நினைவில் வைத்திருக்கும். யாரையெல்லாம், இந்தாண்டில் தமிழ் திரையுலகம் இழந்து வாடுகிறது என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.
News December 17, 2025
ரஷ்மிகாவின் Bachelor Party? வைரல் போட்டோஸ்

நடிகை ரஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்யப்போவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன. எனினும், இருவரும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. இச்சூழலில்தான், தற்போது ரஷ்மிகா தனது நெருங்கிய நண்பர்களுடன் இலங்கைக்கு ட்ரிப் அடித்துள்ளார். இந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட, லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
News December 17, 2025
9 லட்சம் இந்தியர்கள் எங்கே?

கடந்த 5 ஆண்டுகளில் (2020-2024) ஏறக்குறைய 9 லட்சம் மக்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது. இது, அதற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தை (2015-2019) விட 30% அதிகம். குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறியுள்ளனர், என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


