News July 7, 2025
அஜித் மரணம்: பணிக்கு திரும்பிய புகார்தாரர் நிகிதா!

அஜித் குமார் லாக்கப் டெத் வழக்கில் புகார் கொடுத்த நிகிதா கூலாக பணிக்கு திரும்பியுள்ளார். அவர் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் நிலுவையில் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் திருமாறன் உள்ளிட்டோர் கூறியிருந்தனர். மேலும், அவரை கைது செய்து போலீசார் விசாரிக்க உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், 20 நாள்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று திண்டுக்கல்லில் உள்ள MV முத்தையா அரசு கல்லூரிக்கு பணிக்கு சென்றுள்ளார்.
Similar News
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!
News July 7, 2025
பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.