News October 22, 2024
அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு

கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியாகி உள்ளது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிச்செலின் துபாய் 24H 2025, ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப், போர்ஸ் 992 GT3 கோப்பை பிரிவுகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்க உள்ளது.
Similar News
News July 6, 2025
நக்சல்கள் எங்கள் தோழர்களே: திருமாவளவன் பேச்சு

மக்களின் உரிமைக்காக போராடும் நக்சல்கள் எங்கள் தோழர்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் குரலற்றவர்களுக்கான குரல் என தெரிவித்த அவர், நக்சல் தனிப்பட்ட லாபத்திற்காக போராடுவதில்லை எனவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய இயக்கங்களைக் குறிப்பிட்டு திருமா இவ்வாறு பேசியுள்ளார்.
News July 6, 2025
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.
News July 6, 2025
இந்த மெயில் உங்களுக்கும் வருகிறதா?

‘Download e-PAN Card’ என உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதனை நம்ப வேண்டாம் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்திட வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க!