News December 25, 2024

#காலமானார்_அஜித் Trending

image

சில விஷமிகள் காலமானார்_விஜய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, கீழ்தரமான கமெண்ட்களை பதிவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள்,<<14979239>> #காலமானார்_அஜித்<<>> என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சமூக வலைதளங்களில் தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் அட்வைஸ் கொடுத்திருந்த நிலையில், இந்த ஹேஷ்டேக் மூலம் இருதரப்பு ரசிகர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.

Similar News

News July 8, 2025

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

image

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

News July 8, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.

News July 8, 2025

FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

image

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிந்து 83,356 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,446 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. நேற்று மாலை சற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த சந்தை இன்று சற்று சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!