News March 20, 2024
மீண்டும் பயணத்தை தொடங்கிய அஜித்

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், பைக்கில் உலகம் சுற்றிவரும் தனது பயணத்தை அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். அஜித் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 27, 2025
தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி : PM மோடி

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.
News April 27, 2025
நீட் தேர்வு மோசடி புகாரளிக்க இணையதளம் தொடக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
News April 27, 2025
பஹல்காம் தாக்குதல்: முஸ்லீம் மதத்தை துறந்த ஆசிரியர்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் உசேன், ‘மதத்தால் ஏன் ஒருவர் கொல்லப்பட வேண்டும். தொடர்ந்து மதம் வன்முறைக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கிறேன். இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார். இனி நடுநிலை வகித்து மனிதகுலத்தை மட்டுமே பின்பற்ற போவதாகவும் அவர் சொல்கிறார்.