News September 28, 2024
கார் பந்தய அணியை தொடங்கிய அஜித்

‘அஜித் கார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார். இந்த அணியின் ரேஸிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் செயல்படுவார் என்றும் ஐரோப்பாவில் நடக்கும் 24H பந்தயத்தில் போர்ஷே 992 GD3 CUP பிரிவில் இவ்வணி பங்கேற்கும் எனவும் அஜித்தின் மேலாளர் கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்து அஜித் ரசிகர்களும், குறிப்பாக கார் ரேஸிங் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Similar News
News November 29, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 29, 2025
மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 29, கார்த்திகை 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் ▶சிறப்பு: சனி வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கோளறு பதிகம் பாடி நவகிரகத்தின் ஆசியை பெறுதல்.


