News August 17, 2024
‘விடாமுயற்சி’ பார்த்த அஜித்.. சட்டென சொன்ன வார்த்தை

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் அஜித்துக்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டன. படத்தை மிகவும் உன்னிப்பாக பார்த்த அஜித், திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக கூறி இயக்குநர் மகிழ் திருமேனியை கட்டிப்பிடித்து பாராட்டியதாக படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 23, 2025
செய்தியாளரை ‘போடா’ என்ற சீமான்.. மீண்டும் சர்ச்சை

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். SIR-யை மேற்கு வங்க அரசு போல TN அரசு எதிர்க்கவில்லை என சீமான் குற்றம்சாட்டினார். அப்போது, ECI-ன் அறிவிப்பை அரசு பின்பற்ற வேண்டும் எனக் கூறிய ஒரு செய்தியாளரை, ‘டேய் உனக்கு அறிவு இல்லையா பைத்தியக்காரா’ என ஒருமையில் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு TV நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
News November 23, 2025
குளிரில் கைகளில் வெடிப்பா? ஃபிக்ஸ் பண்ண சில டிப்ஸ்!

குளிர்காலம் வந்தாலே கைகள் வறண்டு, வெடிப்பு ஏற்படுகிறதா? தோலின் வெளிப்புற அடுக்கில் ஏற்படும் வறட்சியே இதற்கு காரணம். உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக மாற்ற இதெல்லாம் அவசியம். *சூடான நீரில் கைகளை கழுவாதீர்கள் *கடுமையான சோப்புகளை பயன்படுத்த வேண்டாம் *Moisturizer தடவுங்கள் *கையுறைகள் அணிவது நல்லது *தண்ணீர் நிறைய குடிக்கவும். *கைகளில் வெடிப்பு அதிகமாக இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.
News November 23, 2025
BREAKING: முன்னாள் அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


