News March 20, 2024

ஆதிக்-ஐ பாராட்டிய அஜித்

image

நடிகர் அஜித், தான் நடிக்கும் படத்தின் கதையைப் போலவே டைட்டிலில் மிகுந்த கவனம் செலுத்துவார். அந்த வகையில், தனது 63ஆவது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்கிற தலைப்பை ஆதிக் சொன்னதுமே அஜித் வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவிதமான குணநலன்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான டைட்டில் எனத் தயாரிப்புத் தரப்புக்கும் அஜித் விளக்கம் சொல்லியிருக்கிறார்.

Similar News

News January 4, 2026

டேஞ்சரில் சச்சினின் ரெக்கார்டு!

image

ஆஸி.,க்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜோ ரூட் 65 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் 67-வது அரைசதமாகும். இதன் மூலம், அவர் சச்சினின் மெகா ரெக்கார்டை நெருங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சின்(68) தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திவிடுவாரா ஜோ ரூட்?

News January 4, 2026

வெனிசுலா புதிய அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்!

image

<<18758081>>அதிபர் மதுரோ<<>> சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, முறையான ஆட்சிமாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SC தெரிவித்துள்ளது.

News January 4, 2026

தங்கம் விலை சவரன் ₹1,00,800

image

தங்கம் விலை இன்று (ஜன.4) மாற்றமின்றி காணப்படுகிறது. நேற்று காலை 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்த நிலையில், மாலையில் ₹80 அதிகரித்தது. இதனால் கிராம் ₹12,600-க்கும், சவரன் ₹1,00,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் உயர்ந்ததால் இன்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், விலையில் மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!