News July 5, 2025
அஜித் குமார் மரணம்… பொங்கி எழுந்த ராஜ்கிரண்

அஜித் குமார் லாக்-அப் மரணத்திற்கு திரை பிரபலங்கள் குரல் கொடுக்காமல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸ் அடித்தே கொன்ற கொடுங்கொலையை நினைத்து நெஞ்சம் பதறுவதாக தெரிவித்த அவர், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவை இதுவரை கைது செய்து விசாரிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். தாடி பாலாஜியும் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்திருந்தார்.
Similar News
News July 5, 2025
ஜூலை 15ல் ‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ தொடக்கம்

‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ ஜூலை 15-ம் தேதி அனைத்து நகர்புற, ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்கவும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News July 5, 2025
40 வயதில் கர்ப்பமான நடிகை… ஆச்சரியமூட்டும் உண்மை

தான் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக போவதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை பாவனா ராமண்ணா. சிங்கிளாக இருந்த அவர் கர்ப்பமாகியுள்ளார் என்பதே இதில் சுவாரஸ்யம். 40 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்தாலும், அது கடினமாக இருந்ததாகவும். IVF முறையில் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். ‘என் குழந்தைக்கு தந்தை இல்லை. ஆனாலும் பெருமைப்படும் வகையில் வளர்ப்பேன்’ என்கிறார் பாவனா.
News July 5, 2025
பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். இந்திய ரசிகர்களுக்கு மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP