News September 5, 2025
F1 ரீமேக்கிற்கு அஜித்தே சரியான நடிகர்: நரேன் கார்த்திகேயன்

‘F1’ படத்தை தமிழில் எடுத்தால், அதில் நடிக்க அஜித்குமாரே பொருத்தமாக இருப்பார் என்று ரேஸர் நரேன் கார்த்திகேயன் கூறியுள்ளார். 50 வயதை கடந்தாலும், ரேஸிங்கில் அஜித் முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருவதாக கூறிய அவர், அவரது ரேஸிங்கில் தானும் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழில் ‘F1’ பட ரீமேக் உரிமையை அஜித் தரப்பு பெற்றதாக தகவல் வெளியான நிலையில், இந்த கருத்து ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
Similar News
News September 5, 2025
பாஜகவில் நைனார் நாகேந்திரன் மகனுக்கு பொறுப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நிர்வாகிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஆவார். இதுபோல் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மாரியப்பனுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
சீமானுக்கு வெள்ளைக்கொடி காட்டும் விஜய்?

பிரஸ்மீட், மாநாடு என எல்லா இடத்திலும் விஜய்யை ஆக்ரோஷமாக அட்டாக் செய்து வருகிறார் சீமான். ஆனால், திமுக, பாஜகதான் தங்கள் எதிரிகள் என தெளிவாக இருக்கும் விஜய், சீமானை பதிலுக்கு சீண்ட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறாராம். அதோடு, சீமானை நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பனையூர் வட்டாரத்தினர் சொல்கின்றனர். வெள்ளைக்கொடி பறக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
News September 5, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.5) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,865-க்கும், ஒரு சவரன் ₹78,920-க்கும் விற்பனையாகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று சவரனுக்கு ₹80 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தை கண்டு, சவரன் ₹79,000-ஐ நெருங்கியுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹137-க்கு விற்பனையாகிறது.