News March 23, 2025

தனுஷ் இயக்கத்தில் அஜித்? வெளிவந்த அப்டேட்

image

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வரும் தனுஷ், அதன் பின் அஜித்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரிடம் கேட்டபோது, தகவலை மறுக்காத அவர், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.

Similar News

News March 24, 2025

பொதுத்தேர்வு; பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு

image

தேர்வு முடியும்‌ கடைசி நாள்‌ அன்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +2 பொதுத்தேர்வு நாளையுடனும், +1 பொதுத்தேர்வு மார்ச் 27ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்த பின்பு, மாணவர்கள் அமைதியாக வீட்டிற்கு செல்ல, உள்ளூர் போலீஸ் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 24, 2025

ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

image

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News March 24, 2025

முதலில் வந்தது ஆணா? பெண்ணா? MP சர்ச்சை கருத்து

image

வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!