News March 20, 2024
நண்பர்களுடன் காட்டுக்குள் சமைத்து சாப்பிட்ட அஜித்

‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தற்போது நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே பிரேக் விடப்பட்டுள்ளதால், நடிகர் ஆரவ் உள்பட தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு பைக் ரைடுக்கு கிளம்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது நண்பர்களுடன் காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
Similar News
News January 26, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிரி(39). டிரைவரான இவர், கடந்த 20ஆம் தேதி பைக்கில் பொதட்டூர் பேட்டை பஜார் தெருவில் சென்றார். அங்கிருந்து தனது கிராமத்திற்கு திரும்பிய போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தூக்கி விசப்பட்டு, படுகாயமடைந்தார் . இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.23 உயிரிழந்தார்.
News January 26, 2026
NDA-வின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழிசை பதில்

மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் EPS-ஐ CM வேட்பாளர் என ஏன் ஒரு இடத்தில் கூட PM மோடி குறிப்பிடவில்லை என்ற கேள்விக்கு தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். NDA-வின் CM வேட்பாளராக EPS-ஐ அமித்ஷா அறிவித்துவிட்டதால், தினம் தினம் அதை பற்றி பேச வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார். பாஜக ஒருமுறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னது போல் எனவும், சொல்லாத அண்ணன் தினகரனே சொல்லிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
News January 26, 2026
பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்? அருண்ராஜ் பதில்

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜகவின் பெயரையே பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கும் கட்சியை குறித்து மட்டுமே விஜய் பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனவும், இந்த தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


