News August 7, 2025
திருடியதாக ஒப்புக் கொள் என அஜித் மீது கொடூர தாக்குதல்

அஜித் வழக்கில் திருத்தப்பட்ட FIR-ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகை திருடியதாக அவர் ஒத்துக்கொள்வாரென போலீஸ் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. அதனால், உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமை செய்துள்ளனர். தற்போது, வழக்கில் புகார்தாரராக அஜித்தின் தம்பி நவீன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தனிப்படை டிரைவர் ராமச்சந்திரனின் பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
வைகோ-துரை வைகோ மோதல்?

பாஜக கூட்டணி தொடர்பாக வைகோ, துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக MP-க்களே அவ்வளவு எளிதாக மோடியை சந்தித்துவிட முடியாது என கூறப்படும் நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 முறை சந்தித்துள்ளார் துரை வைகோ. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பாமகவை போல மதிமுகவிலும் தந்தை-மகன் மோதல் ஏற்படுமா?
News August 8, 2025
வீட்டு லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்!

வங்கிகளுக்கான RBI-யின் ரெப்போ வட்டி முன்பே குறைக்கப்பட்டாலும், பல வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு தரவில்லை. இதனால் வீட்டு லோன் எடுத்த பலரும், லோன் எடுத்தபோது இருந்த பழைய (உயர்ந்த) வட்டி விகிதத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் லோன் வாங்கிய வங்கியை அணுகி, வட்டியை குறைக்க கோரலாம். இல்லையெனில், குறைந்த வட்டி தரும் வங்கிக்கு லோனை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.
News August 8, 2025
முதியவர்களுக்காக வீடு தேடி செல்லும் ரேஷன் பொருள்கள்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ வரும் 12-ந் தேதி CM ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 20,42,657 முதியவர்களும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2-ம் சனி, ஞாயிறுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.