News August 5, 2024
ஷேக் ஹசீனாவை சந்தித்த அஜித் தோவல்

உள்நாட்டு கலவரம் காரணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். வங்கதேசத்தில் இருந்து உ.பி மாநிலம் ஹிண்டன் ராணுவ படை விமான நிலையத்திற்கு வந்த ஷேக் ஹசீனாவை, அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அஜித் தோவருடன், மேற்கு பிராந்திய ஏர் கமாண்டின் தலைமை ஏர் மார்ஷல் பிஎம் சின்ஹாவும் உடனிருந்தார்.
Similar News
News January 14, 2026
RCB வீரரின் அணியில் கோலிக்கு இடமில்லை!

RCB விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, தனது ஃபேவரைட் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால், அதில் கோலி இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவின் அணியின் தோனி கேப்டனாக உள்ளார். அதேபோல் ரோஹித், கில்கிறிஸ்ட், சூர்யகுமார் யாதவ், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், பும்ரா, ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News January 14, 2026
அதல பாதாளத்தில் ஈரானின் ரியால் மதிப்பு

<<18836892>>ஈரானில் அரசுக்கு<<>> எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கள்ளச்சந்தையில் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 1.43 மில்லியன் ஈரான் ரியாலாகவும், அதிகாரப்பூர்வ மதிப்பு 42,000 ஈரான் ரியாலாகவும் உள்ளது. அதுவே உங்களிடம் ₹21,48,350 இருந்தால், தற்போது ஈரான் மதிப்பில் 100 கோடிக்கு சொந்தக்காரர் என்று அர்த்தமாகும்.