News October 24, 2024
மக்கள் மனதை அள்ளிய AIRTEL.. சல்யூட் சார் ❤️❤️

மக்களுக்கு பயனளிக்கும் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹ 239, ₹ 399 மற்றும் ₹ 969 ஆகிய 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தரப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களை செய்தவர்கள், விபத்தில் உயிரிழந்தால் ₹ 1லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ₹ 25 ஆயிரமும் காப்பீட்டு தொகையாக ஏர்டெல்லே வழங்குகிறது. Share It.
Similar News
News October 18, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

தீபாவளிக்கு பிறகு புதன் மற்றும் சுக்கிரன் விருச்சிக ராசியில் இணையவிருப்பதால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இது 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. *விருச்சிகம்: புதிய தொழில், பண வரவு, திருமணம் *சிம்மம்: பொன், பொருள் பெருகும், வருமானம் இரட்டிப்பாகும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். *மேஷம்: தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டிற்கு பயணம், நிதி ஆதாயங்கள் பெருகும்.
News October 18, 2025
தோனி, ரோஹித் டெஸ்ட் கேப்டன்சி சுமார் தான்: ரவி

MS தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்ற ரவி சாஸ்திரி, ஆனால் இருவரது டெஸ்ட் கேப்டன்சியும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இருவருக்கும் சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளதாகவும் கூறினார். ரோஹித் தலைமையில் டெஸ்ட்டில் 12 வெற்றி, 9 தோல்விகளை இந்தியா பெற்றுள்ளது. தோனி கேப்டன்சியில் 27 வெற்றி, 18 தோல்வி, 15 டிராவை இந்தியா கண்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News October 18, 2025
பைசன் படத்தை தடை செய்ய வேண்டும்: ஹரி நாடார்

நேற்று ரிலீஸான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ், தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டும் விதமாக படம் எடுப்பதாக ஹரி நாடாரின் சத்திரிய சான்றோர் படை கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஹரி நாடார் கோரிக்கை வைத்துள்ளார்.