News October 24, 2024
மக்கள் மனதை அள்ளிய AIRTEL.. சல்யூட் சார் ❤️❤️

மக்களுக்கு பயனளிக்கும் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹ 239, ₹ 399 மற்றும் ₹ 969 ஆகிய 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தரப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களை செய்தவர்கள், விபத்தில் உயிரிழந்தால் ₹ 1லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ₹ 25 ஆயிரமும் காப்பீட்டு தொகையாக ஏர்டெல்லே வழங்குகிறது. Share It.
Similar News
News November 8, 2025
சீமானின் பொது சேவை தொடர EPS வாழ்த்து

சீமானின் பிறந்தநாளையொட்டி EPS அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுவதாக, தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவரின் மீது உள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக EPS வாழ்த்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
News November 8, 2025
இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
PAK-AFG சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தம்

PAK-AFG இடையே மோதல் நீடித்து வந்தாலும், மறுபுறும் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கன் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டுமே அளிக்க விரும்புவதாக கூறிய ஆசிப், 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.


