News July 14, 2024
₹99க்கு 40 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

அண்மையில் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல், சில டேட்டா திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ₹79 டேட்டா திட்ட விலையை ₹99 ஆக உயர்த்தியுள்ளது. இதன் கீழ் 40 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் ஏர்டெல் வழங்குகிறது. வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு 20 ஜிபி என மொத்தம் 40 ஜிபி டேட்டா அளிக்கிறது. 40 ஜிபி டேட்டா முடிந்தாலும், வரம்பற்ற டேட்டா சேவை 64 Kbps வேகத்தில் கிடைக்கும்.
Similar News
News November 22, 2025
தென்காசி: லாரி மோதி 11 மாடுகள் பலி!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சக்கரை ஆலை அருகே விஸ்வநாதப்பேரி பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் என்பவருக்கு சொந்தமான மாடுகளை இன்று கடையநல்லூர் கொண்டு செல்லும் வழியில், தரணி அருகே செங்கலை ஏற்றி வந்த கனரக வாகனம் மோதியது. இதில், 20 மாடுகள் பலத்த காயம் அடைந்தன. 11 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 22, 2025
இன்று 13 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
News November 22, 2025
இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


