News May 21, 2024
5ஜி இறுதி ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன்

5ஜி ஏலத்திற்கான இறுதிக்கட்ட ஏலதாரர்களின் பட்டியலை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பேண்ட் பிரிவுகளில் பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, ஜியோ ஆகியவை ₹96,317.65 கோடி மதிப்பிலான 10,523.15 MHz அளவிலான 5ஜி அலைக்கற்றையைப் பெற இறுதி ஏலதாரர்களாக தேர்வாகியுள்ளனர். இதில், ஜியோ ₹3,000 கோடி, ஏர்டெல் ₹1,050 கோடி, வோடாபோன் ஐடியா ₹300 கோடி முன் வைப்புத் தொகை செலுத்த முன் வந்துள்ளன.
Similar News
News February 20, 2026
BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஸ்.. என்ன ஆச்சு?

சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஸ் அமர்ந்திருந்தார். உடல் நலக்குறைவால் இன்றைய கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், காலியாக இருந்த அவ்விருக்கையில் அன்பில் அமரவைக்கப்பட்டார். ஆனால், சீனியர்கள் பலர் இருக்கும் போது, அவை முன்னவர் அமர்ந்த இருக்கையில் ஜூனியர் அமைச்சர் ஒருவரை உட்காரவைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
News February 20, 2026
புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிப்.22-ல் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.


