News May 15, 2024
₹37,599 கோடி வருவாய் ஈட்டிய ஏர்டெல்

2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹36,009 கோடியாக இருந்த வருவாய் தற்போது 4.4% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% சரிந்து ₹2,072 கோடியாக உள்ளது.
Similar News
News October 26, 2025
BREAKING: நெருங்கும் புயல் சின்னம்.. வெளுக்கும் கனமழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று(அக்.26) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ‘Montha’ புயல் நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்போது தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
News October 26, 2025
வாழ்வை சிறப்பாகும் 20-20-20 Rule தெரியுமா?

காலை எழுந்ததும் முதல் 1 மணி நேரம் 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையை மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அடுத்த 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3-வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்.
News October 26, 2025
சிறகு விரித்து பறக்கும் துஷாரா விஜயன்

தனித்துவமான நடிப்பால் பலரையும் தன்வசப்படுத்தியர் நடிகை துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரையில் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக மாறினார். படங்களில் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவர போட்டோஸை பகிர்வது அவரது வழக்கம். அப்படி பட்டாம் பூச்சி போல் பல வண்ணங்களில் மின்னும் ஆடையுடன், அவர் பகிர்ந்த போட்டோஸுக்கு லைக்கள் பறக்கின்றன. மேலே SWIPE செய்து பாருங்கள்.


