News October 20, 2025

தலைநகரை திக்குமுக்காட வைக்கும் காற்று மாசு

image

தலைநகரில் 7 ஆண்டுக்கு பின் இப்போது தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள், நேற்று காசு மாசு அதிகரித்து, தரக்குறியீட்டில் 400 புள்ளிகள் சென்றுள்ளது. இந்த அளவு 50-க்கு குறைவாக இருந்தால் தான் சுத்தமான காற்று. 100-க்கு மேல் சென்றால் மோசமானது என்று அர்த்தம். டெல்லியில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 12 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்று பதிவாகியுள்ளது.

Similar News

News October 20, 2025

நடிகர் பாலமுருகன் காலமானார்.. குவியும் இரங்கல்

image

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சி.பாலமுருகன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2007-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல் கனவே’ படத்தில் விக்ராந்த், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘குண்டக்க மண்டக்க’ படத்திற்கு வசனம் எழுதியதோடு நடித்தும் உள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 20, 2025

கெடா கறி அடுப்புல கெடக்க.. இத கொஞ்சம் கவனிங்க

image

காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்திய பின்பு, பட்டாசில் கைவைப்பதற்கு முன், சாப்பிட்டு போ என்று ஒரு குரல் கேட்கும். உடனே இட்லியும், குடல் குழம்பு (அ) கோழி குழம்பை சாப்பிட்டிருப்போம். மதியமும் கறி விருந்து தயாராக, இடையிடையே பலகாரங்களும் நம் வயிற்றை பதம் பார்க்கும். இந்நிலையில், இவற்றையெல்லாம் செரிப்பதற்கு தேவையான உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க

News October 20, 2025

ODI போட்டியில் நடந்த மிகப்பெரிய Error!

image

இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-யில் 176.5 Kph வேகத்தில் ஆஸி.,யின் மிட்சல் ஸ்டார்க் பந்து வீசியதாக கூறப்பட்டது. இதன்மூலம், அதிவேகமாக பந்துவீசிய சோயப் அக்தரின்(161.3Kph) சாதனையை முறியடித்தார் என பாராட்டப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசவில்லையாம். இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த தவறு எனவும் அவர் 140.8 kmph வேகத்தில்தான் பந்துவீசினார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!