News November 17, 2024
காற்றும் விற்பனைக்கு வந்தாச்சு..!

உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய கொடையான நீரை, நாம் இப்போது விலைக்கு வாங்கி வருகிறோம். அடுத்ததாக தற்போது காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தாலியில் உள்ள கோமோ ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் Communica நிறுவனம், தூய காற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த தூய காற்று 400ml ₹907-க்கு விற்கப்படுகிறது. இதை சுவாசித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் அந்நிறுவனம் கூறுகிறது.
Similar News
News March 7, 2026
இந்தியாவின் பாதுகாப்பில் ஈரானின் கப்பல்

இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட ஈரானின் IRIS DENA போர்க்கப்பலில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்தியா உதவவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், Vizag-ல் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற IRIS LAVAN போர்க்கப்பல் தற்போது பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக ஈரான் கூறிய நிலையில், இந்தியா உடனடியாக IRIS LAVAN-ஐ கொச்சியில் நிறுத்த அனுமதித்துள்ளது.
News March 7, 2026
அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா?

சமீபத்தில் டெல்லி சென்ற EPS, தொகுதி பங்கீடு விவரங்களை அமித்ஷாவிடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது பாஜகவின் விருப்ப பட்டியலில் திருத்தங்கள் செய்யவேண்டும் என அமித்ஷா கூறினாராம். பின்னர், அன்புமணி தந்த 30 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை EPS சரிபார்த்த போது, அதில் அதிமுகவினர் எதிர்பார்க்கும் மயிலம், மேட்டூர் உள்ளிட்ட சில தொகுதிகளும் இருப்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.
News March 7, 2026
ராஜ்ய சபா துணை தலைவராகிறாரா தம்பிதுரை?

ராஜ்ய சபா துணை தலைவரான நாராயண் சிங்கின் பதவிக்காலம் ஏப்.9-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணை தலைவர் பதவியை ராஜ்ய சபா எம்பியாக தேர்வாகவுள்ள தம்பிதுரைக்கு பாஜக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், லோக்சபாவில் துணை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதேநேரம், லோக் சபாவில் துணை சபாநாயகர் பதவியை நிரப்பாதது போல், ராஜ்ய சபாவிற்கும் அதே முடிவை மத்திய அரசு எடுக்கலாம்.


