News March 23, 2024
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம்

பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டிஜிசிஏ அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஏர் இந்தியா அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அந்நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 18, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. சென்சார் போர்டு ரியாக்ஷன்

ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து CBFC தலைவர் பிரசூன் ஜோஷி கருத்து கூற மறுத்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேசியபோது, விஜய்யின் ஜன நாயகன் பட விவகாரத்தில் என்ன நடக்கிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றிப் பேச முடியாது என்றார். இதனிடையே, SC உத்தரவின்படி வரும் 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
News January 18, 2026
இவுங்கதான் பிக்பாஸ் 9 டைட்டில் வின்னரா?

இன்றுடன் முடிவடையும் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. 2-ம் இடத்தை சபரிநாதனும், 3-வது இடத்தை அரோராவும், 4-வது இடத்தை விக்ரமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. Wild Card போட்டியாளர் ஒருவர் டைட்டில் வெல்வது இத்துடன் 2-வது முறையாகும். ஏற்கெனவே, 7-வது சீசனில் Wild Card போட்டியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார். இந்த சீசனில் உங்க ஃபேவரைட் யார்?
News January 18, 2026
இன்னைக்கு மதியம் 1:30 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ஸ்டார் கிரிக்கெட்டர்கள் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ODI கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். NZ-க்கு எதிரான இன்றைய 3-வது ODI-ல் அவர்களின் ஆட்டத்தை பார்க்க தவறினால், அடுத்த 5 மாதங்களுக்கு Blue ஜெர்சியில் அவர்களை பார்க்க முடியாது. NZ தொடருக்கு பிறகு, இந்திய அணி ஜூன் மாதத்தில்தான் AFG-க்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க?


