News March 17, 2024

தஞ்சையில் பறக்கும்படை வாகனம் துவக்கம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் அவர்கள் நேற்று (16.03.2024) துவக்கி வைத்து கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News

News January 19, 2026

தஞ்சாவூர்: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

தஞ்சாவூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

தஞ்சாவூர்: அமைச்சர் , எம்எல்ஏ விடுதலை – அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News January 19, 2026

தஞ்சாவூர்: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

தஞ்சாவூர், சாலியமங்கலம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சோதனை மேற்கொண்டதில், சாலியமங்கலம் மேற்குதெருவை சேர்ந்த சிலம்பரசன்(37) என்பவர், மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதையெடுத்து அவரிடம் விசாராணை மேற்கொண்டு, 481 மதுபாட்டிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 1622 பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!