News June 24, 2024
பொறியியல் படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு BE, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் தேர்வு ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 28ஆம் தேதிக்குள் https://afcat.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
Similar News
News September 14, 2025
விஜய்யின் பரப்புரை ரத்து

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
News September 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 14, ஆவணி 29 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News September 14, 2025
ஒரு மாதத்தில் நல்லது நடக்கும்: செங்கோட்டையன்

அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இணைய வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதே தனது ஆசை என்று செங்கோட்டையன் பேசினார்.