News February 17, 2025
பாஜகவுக்கு அடிபணிவதே அதிமுகவின் கொள்கை: திமுக

அதிமுகவுக்கு என்று கொள்கை நிலைப்பாடோ, போராட்ட வரலாறோ இல்லை என திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமையை எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி பாஜக காலில் விழுந்து கிடப்பதையே அதிமுக வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள, பாஜகவிடம் சரண்டர் ஆவதையே அதிமுக தனது நிரந்தர கொள்கையாக கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 29, 2025
மதுரை: மோசமான வானிலை; 12 விமானங்கள் ரத்து

மதுரை: டித்வா புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்து வரும் தொடர் மழையால், மதுரை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை காரணமாக சென்னை, பெங்களூர், மும்பையிலிருந்து மதுரைக்கு வரும் சிறிய ரக விமானங்கள் 11 ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹைதராபாத்திலிருந்து மதுரை வரும் பெரிய விமானம் ஒன்று ரத்து. இதனால் மொத்தம் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 29, 2025
IPL-லில் இருந்து ஓய்வை அறிவித்தார் பாப் டூப்ளசிஸ்

2026 IPL தொடரில் விளையாடப் போவதில்லை என தெ.ஆப்பிரிக்கா நட்சத்திர வீரர் பாப் டூப்ளசிஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக IPL-ல் விளையாடிய நிலையில், இந்தாண்டு ஏலத்துக்கு தனது பெயரை கொடுக்கப் போவதில்லை என கூறியுள்ளார். தனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த இந்தியர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார். CSK நட்சத்திர வீரராக திகழ்ந்த அவர், RCB DC உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக விளையாடினார்.
News November 29, 2025
பன்றியுடன் சண்டை போடாதே: ஆர்த்தி

ரவி மோகன் மற்றும் கெனிஷாவை ஆர்த்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார். பன்றியுடன் சண்டையிடாதே, ஏனெனில் நீயும் பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள், ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான் என ஆர்த்தி பதிவிட்டுள்ளார். ரவி மோகன் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், ஒருவரை தாக்கி மற்றவர் கருத்து தெரிவிக்கக்கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், மறைமுகமாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.


