News October 25, 2024
அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: இபிஎஸ்

மக்களவைத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளை நம்பியே முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7% குறைந்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி 1% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 537 ▶குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
▶பொருள்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
News December 2, 2025
விஜய்க்கு அறிவுரை சொல்லமாட்டேன்: கமல்

அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் பற்றி விஜய்க்கு அறிவுரை சொல்வீர்களா என்ற கேள்விக்கு, அறிவுரை சொல்லும் இடத்தில் தான் இல்லை என்றும், தனது தம்பிக்கு (விஜய்) அறிவுரை வழங்குவதற்கு இதுசரியான தருணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனுபவத்திற்கு சார்பு கிடையாது என்பதால், அது உங்களுக்கு தேவையானதை கற்றுக்கொடுக்கும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
News December 2, 2025
கிங் கோலியின் சாதனை.. வீறுநடை போடும் இந்தியா

ODI கிரிக்கெட்டில் சேஸ் மாஸ்டரான விராட் கோலி கடைசியாக அடித்த 17 சதங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. 17 போட்டிகளில் இந்தியா 15-ல் வெற்றி, இரு போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. மேலும், சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதிலும் நம்பர் 1 வீரராக கோலி உள்ளார். அவர் 82 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அதில் இந்தியா 59 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.


