News September 15, 2024

அண்ணா வழியில் அதிமுக பயணிக்கும்: இபிஎஸ்

image

சமத்துவ சமுதாயம் காண அண்ணா வழியில் அதிமுக அயராது உழைக்கும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி அவர் Xஇல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டுக்கு புதிய அரசியல் பாதையை வகுத்து தந்த அரசியல் பேராசான் அண்ணா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதனிடையே, அண்ணா சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Similar News

News November 27, 2025

பாமகவில் சமரசம் செய்கிறாரா செல்வப்பெருந்தகை?

image

அன்புமணியும், ராமதாஸும் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். ஆனால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸ் தனக்கு பரிச்சயமானவர் என்ற அவர், அதனால்தான் ஹாஸ்பிடலில் இருந்தபோது அவரை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை எனவும் சமரச தூதுவராக செயல்பட அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

image

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 27, 2025

7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

image

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!