News February 17, 2025

இந்தி திணிப்பை அதிமுக கடுமையாக எதிர்க்கும்: டி.ஜெ.

image

இந்தித் திணிப்பை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுகதான் ஒரிஜினல் “திராவிட இயக்கம்” என்றும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார். கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 16, 2025

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க TIPS

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை 2 நிமிடங்களுக்கு முன் படித்ததை மறந்துவிடுவதால் டென்ஷன் ஆகுதா? அவங்கள திட்டாதீங்க. அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில வழிகள் இருக்கு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை (முட்டைக்கோஸ், வல்லாரை கீரை, திராட்சை) கொடுங்கள். சரியான உறக்கம், சுறுசுறுப்பான விளையாட்டு ஆகியவற்றை பழக்கப்படுத்துங்கள். புதிய புதிய விஷயங்களை கற்பதும் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். SHARE.

News November 16, 2025

இதெல்லாம் ரூல்ஸ் கிடையாது… ஆனால், ஃபாலோ பண்ணணும்

image

சீனாவில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர். காலங்காலமாக பின்பற்றப்படும் அந்த விதிமுறைகளில் சிலவற்றை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் எந்த விதிகள் உங்களை ஆச்சரியப்பட வைத்தது? SHARE

News November 16, 2025

10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

image

TN-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி டிச.12-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரிக்கையும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ல் அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இப்போராட்டத்தால் தமிழகமே குலுங்கும் என்று பேசியுள்ளார்.

error: Content is protected !!