News May 13, 2024
இபிஎஸ் தலைமையில் தான் அதிமுக: செங்கோட்டையன்

தேர்தல் முடிவுக்கு பிறகு செங்கோட்டையன், வேலுமணி தலைமையில் அதிமுக இயங்குமென அமைச்சர் ரகுபதி பேசியிருந்தார். இதற்கு இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் எந்த சலசலப்போ, பிளவோ இல்லை. அவரின் தலைமையில்தான் அதிமுக இயங்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். 40 ஆண்டுகளாக நேர்வழியில் அரசியல் செய்து வரும் என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News March 17, 2026
என்ஆர் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி பேசி வருவதாக தகவல்

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இருக்கும் நிலையில், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று பத்திரிகையாளரிடம் கூறியுள்ள நிலையில், அவர் தவெகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
News March 17, 2026
CINEMA 360: மீண்டும் தளபதி காம்போ!

*சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில் ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம் *H.வினோத்- சூர்யா காம்போவில் விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளதாம் *மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது *‘அரசன்’ படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம் *பைனான்ஸ் பிரச்னையால், ரவி மோகன் – SJ சூர்யா நடிக்கும் படம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.
News March 17, 2026
பாஜக கேட்டது 35.. அதிமுக கொடுக்க முன்வருவது 27!

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 35 தொகுதிகள் வழங்குமாறு பாஜக கோரியிருந்த நிலையில், 27 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை வரும் 20-ம் தேதி இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.


