News April 19, 2025
3 அமைச்சர்களை டார்கெட் செய்யும் அதிமுக

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக சமீபத்தில் அதிமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த மூன்று அமைச்சர்கள் விவகாரங்களை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் அதிமுக தீவிரமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக முதல்வருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.
Similar News
News January 26, 2026
விஜய், செங்கோட்டையனை அட்டாக் செய்த அதிமுக

அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் கூறும், தூயசக்திக்கான விளக்கவுரையா என விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத, தனது Fan’s-ஐ கூட ஏமாற்றும் தவெக தலைவர் போல் இருக்கக்கூடாது எனவும் சாடியுள்ளது.
News January 26, 2026
ராசி பலன்கள் (26.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவு வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.


