News October 9, 2025

அதிமுக டி-சர்ட் உடன் தவெக கொடி PHOTO

image

EPS-ன் <<17953860>>நேற்றைய பேச்சு<<>>, ADMK – TVK கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த கூட்டத்தில் TVK கொடியை காண்பித்த இளைஞர், ADMK கொடியின் நிறம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்த போட்டோ வைரலாகிறது. கரூர் சம்பவத்தால் விஜய்க்கு BJP நெருக்கடி தருவதாக கூறப்படும் நிலையில், ADMK-வை வைத்து கூட்டணிக்கான காயை நகர்த்துவதன் ஒரு பகுதியே இந்த ‘கொடி அரசியல்’ என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News October 10, 2025

இந்தியா – UK பேச்சுவார்த்தை: முக்கிய அம்சங்கள்

image

இந்தியா- UK இடையேயான தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்வரும் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. *இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் *2030-க்குள் இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தை ₹4.97 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு *பிரிட்டனின் ஒன்பது முன்னணி பல்கலை.,கள் இந்தியாவில் கிளையை நிறுவும் *பாலிவுட் படங்களை பிரிட்டனில் தயாரிக்க திட்டம்.

News October 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 10, 2025

விஜய்யை கூட்டணிக்கு இழுக்க BJP முயற்சி: வேல்முருகன்

image

விஜய்யை மிரட்டி பணிய வைத்து தங்களது கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு சினிமா மீதான மக்களின் மோகமும் ஒரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அஜித் படுகொலையில் சிபிஐ விசாரணையை கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது கரூர் துயரில் அதே விசாரணையை கோருவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!