News June 26, 2024
அதிமுகவினர் இன்றும் வெளியேற்றம்

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை, பேரவையில் விவாதிக்க அதிமுக எம்எல்ஏ.க்கள் கடந்த 3 நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்றும் சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்று அமளி செய்ததால், அவர்கள் அனைவரையும், அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இதே விவகாரத்தில் நேற்று அனைவரும் சஸ்பெண்ட் செய்யட்டனர்.
Similar News
News March 2, 2026
349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 2, 2026
வங்கிக் கணக்கில் ரூ.2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
News March 2, 2026
பெரிதாகும் போர்.. ஈரானுடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.


