News February 25, 2025
அதிமுக மூழ்கும் கப்பல்: ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அதில் யாரும் ஏறமாட்டார்கள் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கட்சி அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கட்சியை மீட்க துரோகிகளை அகற்ற வேண்டும். 2026ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது என விமர்சித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
3 ஓவர்களில் சதமா..! மரண ரெக்கார்ட்

கிரிக்கெட்டின் ஜாம்பவான் எனக் கொண்டாடப்படும் ஆஸி.யின் டான் பிராட்மேனின் நினைவு நாள் இன்று. 3 ஓவர்களில் அவர் சதம் அடித்ததைக் குறித்து தெரியுமா? 1931ல் உள்ளூர் போட்டி ஒன்றில் அவர் இச்சாதனையை படைத்துள்ளார். அப்போதெல்லாம், ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீசப்படும். பிராட்மேன் முதல் ஓவரில் 33 ரன்கள், 2வது ஓவரில் 40 ரன்கள், 3வது ஓவரில் 27 ரன்களை விளாசினார். வெறும் 24 பந்துகளில் அவர் சதம் விளாசி இருக்கிறார்.
News February 25, 2025
SPAM கால் என நினைத்து வேலையை இழந்த இளைஞர்

Reddit யூசரோட மொபைலுக்கு வெளிநாட்டு கால் ஒன்னு வந்திருக்கு. மோசடி, spam அழைப்பா இருக்கலாம்னு நினைச்சு அத எடுக்காம விட்டுட்டாரு. வேறொரு நாள் ட்ரூ காலர்ல அந்த நம்பர போட்டு பார்த்தப்ப தான் பதறிப் போனாரு. காரணம் அது அமெரிக்காவுல இருக்குற அமேசான் நிறுவனத்துல இருந்து ஜாப் ஆஃபரா வந்த கால். திரும்ப அந்த நம்பர கான்டாக்ட் பண்ணப்ப நோ யூஸ். வட போச்சேன்னு அப்செட்ல இருக்காரு.
News February 25, 2025
₹3,252 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சர்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹3,252 கோடி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பெரியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நிதி விடுவிப்பதைத் தாமதித்தால், திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊதிய நிலுவை ₹2,400 கோடியாகவும், உட்கட்டமைப்பு நிலுவை ₹852 கோடியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.