News August 26, 2025
BJP வெற்றிக்கு அதிமுகவினரும் உழைக்கணும்: அண்ணாமலை

EPS வெற்றிபெற பாஜகவினர் உயிரைக் கொடுத்து உழைப்பது போல அதிமுகவினரும் பாஜகவினர் ஜெயிக்க உழைக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதிமுக தலைவர்கள் பாஜக வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். ஆணவக்கொலைகள் மீது பாஜக கோபத்தில் இருக்கிறது; 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சாதிவெறியால் கொலை செய்தால், மேஜரானவர்களுக்கு வழங்கும் தண்டனையை அவர்களுக்கும் வழங்க வேண்டுமென்றார்.
Similar News
News August 26, 2025
PM மோடியின் தீபாவளி பரிசு… ₹1 லட்சம் Gift?

தீபாவளி பரிசாக GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படுமென PM மோடி அறிவித்திருந்தார். தற்போது, புதிய கார்களுக்கு 28% – 49% வரை வரி (₹10 லட்சத்துக்கு கார் வாங்கினால் ₹2.90 லட்சம் வரி) விதிக்கப்படுகிறது. ஆனால் GST வரி சீர்திருத்தங்களால் 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. இதனால், ₹1 லட்சம் வரை வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸுக்கான GST வரியும் குறைய வாய்ப்புள்ளது.
News August 26, 2025
பொது அறிவு வினா- விடை!

1. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
2. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. பெண்களை முதல்முதலில் காவல்துறையில் சேர்த்த நாடு எது?
4. டேபிள் டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் என்ன?
5. இரட்டைப் புலவர்களின் பெயர் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 26, 2025
திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது: தமிழிசை

திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டுமென தமிழிசை தெரிவித்துள்ளார். அமைச்சர் TRB ராஜாவின் மகன் <<17517914>>அண்ணாமலையிடம் பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து<<>> கையில் வாங்கினார். இச்சம்பவம் விவாதமான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, கல்வி நிறுவனங்களில் விருத்தினர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியது கடமை. அங்கு தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரி கிடையாது என்றார்.