News April 27, 2025
2026-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. உதயகுமார் உறுதி

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News April 28, 2025
மே.வங்க அரசியலில் பேசுபொருளாகும் மதம்

மம்தா பானர்ஜி ஒரு இந்து விரோதி என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, மம்தா தனது இந்து அடையாளத்தை சமீபகாலமாக வெளிப்படுத்திவருகிறார்.தான் ஒரு பெருமைமிகு இந்து என்று சட்டசபையிலே அறிவித்தார். தன்னுடைய பிராமண அடையாளத்தையும் பறைசாற்றிக்கொண்டார். இதனால், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மேற்கு வங்க அரசியல் களத்தில் மதம் பேசுபொருளாகி உள்ளது.
News April 28, 2025
IPL BREAKING: RCB அபார வெற்றி

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB அணி மகத்தான வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த DC அணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த RCB அணியின் கோலி (51), க்ருனால் (73) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.
News April 28, 2025
விராட் 50, க்ருனால் 50, பார்ட்னர்ஷிப் 100

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி & க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், RCB அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 163 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணியின் படிக்கல் 0, பட்டிதார் 6, பெத்தெல் 12 என அவுட் ஆகினர். இருப்பினும் கோலி & க்ருனாலின் நிதானமான ஆட்டம் RCB-ஐ வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது.