News March 19, 2025
மீண்டும் ஒன்று சேர்ந்த அதிமுக.. கழ(ல)கத்தில் மாறிய காட்சிகள்!

2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று EPS, OPS கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அதோடு, பேரவைக்குள் செங்கோட்டையன் பேச வாய்ப்பளிக்க கோரி சபாநாயகருக்கு இபிஎஸ் சைகை காண்பித்தது, பேரவை உணவகத்தில் அதிமுக MLAக்களுடன் அமர்ந்து செங்கோட்டையன் உணவருந்தியது என உள்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 19, 2025
திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் கொலை

DMK EX எம்பி குப்புசாமியின் உதவியாளரும், தொமுச நிர்வாகியுமான குமார் (71) படுகொலை செய்யப்பட்டார். ECR-ல் உள்ள உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கும்பலை தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற குமாரை காரில் கடத்திச் சென்று, செஞ்சி அருகே கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 19, 2025
வீடு வீடாக ரேஷன் விநியோகம் குறித்து ஆய்வு: சக்கரபாணி

வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
News March 19, 2025
CSK மேட்ச் பார்க்க 2.50 லட்சம் பேர் வெயிட்டிங்!

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் வாங்க 2.50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். எனவே, முன்பதிவு செய்ய காத்திருக்கும் அத்தனை பேருக்கும் டிக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஒருவரால் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.