News April 17, 2025
நிர்வாகிகளுக்கு அதிமுக போட்ட கடிவாளம்

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் நிர்வாகிகளுக்கு அதிமுக கடிவாளம் போட்டுள்ளது. கழகத்தின் முக்கிய முடிவுகள், நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அவ்வப்போது தெரிவிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும் அனுமதியின்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
₹2,000-ஆக உயர்த்தி அறிவித்தார் CM ஸ்டாலின்

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000-லிருந்து ₹18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News November 19, 2025
அடிமை ஆக்கும் அழகியே சாய் பல்லவி

‘பிரேமம்’ திரைப்படம் மூலம் ஓவர்நைட்டில் பிரபலமான சாய் பல்லவிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது இயல்பான நடிப்பு மற்றும் டான்ஸில் பின்னி பெடலெடுத்து வருகிறார். தென்னிந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். இவர், தற்போது இன்ஸ்டாவில் சுற்றுலா சென்ற போட்டோக்களை பகிர்ந்துள்ளார். உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 19, 2025
நகைக்கடன் வாங்குவோருக்கு… HAPPY NEWS

கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 கடன் வழங்கப்பட்டு வந்தது. இதை ₹7,000 ஆக உயர்த்தி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனாலும், வங்கிகளில் பழைய தொகைக்கு மேல் கடன் வழங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடன் தொகையை உயர்த்தி வழங்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து நகைக்கடன் தொகை உயரும். SHARE IT


