News August 14, 2024

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

image

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், திமுகவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

Similar News

News October 18, 2025

அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

image

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News October 18, 2025

ராசி பலன்கள் (18.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 18, 2025

பட்டாசு வெடிக்கும்போது இது ரொம்ப முக்கியம் மக்களே

image

ஒவ்வொரு ஆண்டும், கவனக்குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பலருக்கு பட்டாசு தொடர்பான காயங்கள் ஏற்படுகின்றன. எனவே பட்டாசு வெடிக்கும் முன் இவற்றை பின்பற்றுவது முக்கியம்: *தரமான பட்டாசுகளை வாங்குவது *தீ எளிதில் பற்றும் மெல்லிசான ஆடைகளை தவிர்ப்பது *பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் வெடிப்பது *வெடிக்காது பாட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க கூடாது *வெடி வெடிக்க குறுகிய இடங்களை தவிர்ப்பது நல்லது.

error: Content is protected !!